திருத்துறைப்பூண்டி ரயில்வே கேட் மூடும் நேரத்தை மாற்றி அமைத்து தரவேண்டும்: வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை

 

திருத்துறைப்பூண்டி, அக். 8: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் திருச்சி தென்னக ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: வரும் 13 ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்களுக்கு திருத்துறைப்பூண்டி-மன்னை சாலையில் உள்ள LC no47 ரயில்வே கேட் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் கடைக்கு பொருள்கள் வாங்க வருபவர்களும் கடையில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் பணியாளர்கள் இரவு 9 மணி அளவில் ரயில்வே கேட்டை கடந்து செல்வார்கள். இதுபொதுமக்களுக்கும் கடையில் பணியாற்றுவதற்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். ஆகவே ரயில்வேகேட் மூடப்படும் நேரத்தை இரவு 10 மணி முதல் விடியற்காலை 6:00 மணி வரை மாற்றி அமைத்துத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 

The post திருத்துறைப்பூண்டி ரயில்வே கேட் மூடும் நேரத்தை மாற்றி அமைத்து தரவேண்டும்: வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: