பொதட்டூர்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்

திருத்தணி: திருத்தணி அருகே, பொதட்டூர்பேட்டை லயன் சங்கம் சார்பாக காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. லயன் சங்கம் மற்றும் சென்னை இ.என்.டி. ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய இந்த முகாமில் அறுவை சிகிச்சை நிபுணர் மோகன் காமேஸ்வரன் தலைமையில் சென்னை இ.என்.டி. ஆராய்ச்சி மைய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு ஏழை மக்களுக்கு காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் வழங்கினர்.

லயன் சங்கத் தலைவர் டி.எம்.சுகுமார், செயலாளர் இ.பி.தேசப்பன், பொருளாளர் இ.டி. குணசேகரன் மற்றும் டாக்டர் என்.கே.ராஜேந்திரன, என்.கே.நரசிம்மன். ஏ.டி.சீனிவாசன், கே.லிங்கய்யா, ஏ.ஆர்.சுப்பிரமணி, அன்பு வேலாயுதம், கிருஷ்ணன், கே.எஸ்.அமரன் மற்றும் லயன் சங்க உறுப்பினர்கள் இணைந்து முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். இதில், குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் பெற்றனர். முகாமில் 6 வயதுக்குட்பட்ட காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் உட்காது செயற்கை நரம்பு இலவசமாக பொருத்தப்பட்டது.

The post பொதட்டூர்பேட்டையில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: