ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் தீபா கர்மாகர் ஓய்வு

புதுடெல்லி: இந்திய ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் தீபா கர்மாகர் (31 வயது), போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின் மகளிர் ஜிம்னாஸ்டிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய தீபா கர்மாகர், 2016 ரியோ ஒலிம்பிக்சில் 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.
ஜிம்னாஸ்டிக்கில் சவாலானதாக விளங்கும் ‘புரோடுநோவா வால்ட்’ பிரிவில் பதக்கங்களைக் குவித்து பாராட்டுகளை அள்ளியதுடன், உலக அளவில் டாப்5 வீராங்கனைகளுள் ஒருவராகவும் தீபா முத்திரை பதித்துள்ளார்.

2021 அக்டோபரில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் 21 மாத தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் களத்துக்கு திரும்பியதுடன் தாஷ்கன்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். தனது ஓய்வு முடிவு குறித்து X வலைத்தள பக்கத்தில் உருக்கமான கடிதத்தை பதிந்துள்ள கர்மாகர், நெருக்கடியான தருணங்களில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளதுடன், இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு ஒரு பயிற்சியாளராக, ஆலோசகராக செயல்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

The post ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் தீபா கர்மாகர் ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: