அதன்பின் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெறும். சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 5 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்ட வசமானது.
அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கவில்லை. மயக்கமடைந்து மருத்துவமனையில் இறந்துள்ளனர். அவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.