பிரிந்த மனைவியுடன் பேசிய கணவனுக்கு சரமாரி கத்தி வெட்டு கள்ளக்காதலி வெறிச்செயல் பேரணாம்பட்டு அருகே பரபரப்பு

 

பேரணாம்பட்டு, அக்.7: பேரணாம்பட்டு அருகே பிரிந்த மனைவியுடன் மீண்டும் பேசி வந்த கணவனை அவரது கள்ளக்காதலி சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கார்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(65). தென்னந்தோப்பில் காவலாளியாக வேைல செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆம்பூரை சேர்ந்த 44 வயது விதவைப்பெண்ணுடன் செல்வத்திற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர், இருவரும் கார்கூர் கிராமத்தில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில், செல்வம் பிரிந்து சென்ற மனைவியுடன் மீண்டும் பேசி வந்தாராம். நேற்று முன்தினம் இதுதொடர்பாக செல்வத்திடம் அவரது கள்ளக்காதலி கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த அந்த பெண் தேங்காய் வெட்டும் கத்தியை எடுத்து செல்வத்தின் தலை, கழுத்து, கை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த செல்வத்தை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மேல்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் அருண்காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ெதாடர்ந்து, தலைமறைவாக இருந்த செல்வத்தின் கள்ளக்காதலியை நேற்று போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். காவலாளியை அவரது கள்ளக்காதலி சரமாரி வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பிரிந்த மனைவியுடன் பேசிய கணவனுக்கு சரமாரி கத்தி வெட்டு கள்ளக்காதலி வெறிச்செயல் பேரணாம்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: