பாஜ நிர்வாகி கொலையில் கைதான சிப்பந்தி சஸ்பெண்ட் கே.வி.குப்பம் அருகே

கே.வி.குப்பம், டிச.24: கே.வி.குப்பம் அருகே பாஜ நிர்வாகி கொலை வழக்கில் கைதான சிப்பந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே கடந்த 16ம் தேதி பாஜ நிர்வாகி விட்டல்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலாசேட் என்பவர் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் பாலாசேட்டின் மகன் தரணிகுமார் மற்றும் கமலநாதன், சந்தோஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் பாலாசேட்டின் மற்றொரு மகனான ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தரணிகுமார், கே.வி.குப்பம் அடுத்த பில்லாந்திப்பட்டு கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கொலை வழக்கில் கைதானதால் கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ், கிராம உதவியாளர் தரணிகுமாரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

The post பாஜ நிர்வாகி கொலையில் கைதான சிப்பந்தி சஸ்பெண்ட் கே.வி.குப்பம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: