திருமணிமுத்தாற்றில் ரசாயன நுரையுடன் வெளியேறும் தண்ணீர்

 

நாமகிரிப்பேட்டை, அக்.7: திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கி, 2 கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரத்தில் இருந்து திருமணிமுத்தாறு தொடங்கி சேலம் நகரப்பகுதி, ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, எலச்சிபாளையம், பரமத்திவேலூர் வழியாக சென்று இறுதியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் நேற்று சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. திருமணிமுத்தாற்றில் சாக்கடை மற்றும் சாயக்கழிவு நீர் கலப்பதால் ஆற்றில் நுரையுடன் தண்ணீர் செல்கிறது.

மேலும் திருமணிமுற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கியதால் 2 கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைபட்டது. மழையை பயன்படுத்தி சாயப்பட்டறை உரிமையாளர்கள் கழிவுநீரை திறந்து விடுவதால் திருமணிமுத்தாற்றில் கருநிறத்துடன் நுரையுடன் வெளியேறும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீரால் நிலத்தடி நீர் மாசடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் சாயப்பட்டறை கழிவுநீரை திறந்து விடும் மர்ம நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருமணிமுத்தாற்றில் ரசாயன நுரையுடன் வெளியேறும் தண்ணீர் appeared first on Dinakaran.

Related Stories: