இடி தாக்கியதில் டிரான்ஸ்பார்மர் சேதம்

 

வேப்பனஹள்ளி, அக்.7: வேப்பனஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்த போது விருப்பச்சந்திரம் ரைஸ்மில் அருகே உள்ள தென்னை மரத்தில் பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது.

இதில், அருகே இருந்த டிரான்பார்மரும் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து விருப்பச்சந்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலுள்ள கத்திரிப்பள்ளி புரம், நெடுசாலை, சென்னசந்திரம் உள்ளிட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பழுதடைந்த
டிரான்ஸ்பார்மரை சீர் செய்தனர்.

The post இடி தாக்கியதில் டிரான்ஸ்பார்மர் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: