நாகப்பட்டினத்தில் அக்னி நட்சத்திரம்போல் சுட்டெரிக்கும் வெயில்

 

நாகப்பட்டினம்,அக்.5: நாகப்பட்டினத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்க குளங்களில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர். நாகை நுழைவாயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தை போல் தற்போது மீண்டும் கடும் வெயில் அடிக்கிறது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் அவ்வப்போது வெப்ப காற்று வீசுகிறது.

அதிகாலை தொடங்கும் வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர தயக்கம் காட்டுகின்றனர். பணி நிமித்தமாக வெளியில் செல்வோர்கள் எந்த நேரமும் தங்களது தலையில் தொப்பி அணிந்தும், குடைகளை பிடித்து கொண்டும் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே பிள்ளை பனங்குடி கிராமத்தில் சிறுவர்கள் டைவடித்து குளித்து இளைஞர்கள் ஆர்வமுடன் விளையாடுகின்றனர். வெயிலின் கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளைஞர்கள் ஆர்வமுடன் குளத்தில் இறங்கி விளையாடுவது ஆனந்தமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

The post நாகப்பட்டினத்தில் அக்னி நட்சத்திரம்போல் சுட்டெரிக்கும் வெயில் appeared first on Dinakaran.

Related Stories: