தஞ்சாவூர், ஜன.3: வருவாய்துறை அலகில் பணிபுரியும் பணியாளர்கள் பயிற்சி முடிக்காததால் பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், உரிய காலத்தில் பயிற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் தஞ்சாவூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
துணைத் தலைவர்கள், முருககுமார், யுவராஜ், பரணிதரன், தரும கருணாநிதி, ஆகியோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலகில் பணிபுரியும் பணியாளர்களுக்கு காலத்தில் வழங்க வேண்டிய பவானிசாகர் பயிற்சி, நில அளவை பயிற்சி, காவல்துறை பயிற்சிகள் காலத்தில் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பயிற்சிகள் உரிய காலத்தில் முடிக்காத காரணத்தால் பதவி உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே தகுதியுள்ள வருவாய்த்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய காலத்தில் பயிற்சிக்கு அனுப்பிட வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரெகுலர் வட்டாட்சியர் பணியிடங்களில் பார்த்தவர்களே தொடர்ந்து இரண்டாவது முறை, மூன்றாவது முறையாக கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பார்த்து வருகின்றனர். மூன்றுமாதங்களுக்கு முன்பே எங்கள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில் இது சம்மந்தமாக குறிப்பிட்டு கடிதம் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர், ஆனால் இதுநாள்வரை ரெகுலர் வட்டாட்சியர்கள் மாற்றப்படவில்லை.
கூர்நோக்கு பணியிடங்களில் ஒரு ஆண்டு மட்டும் பணிபார்க்க அனுமதித்திட வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலகில் கூர்நோக்கு பணியிடங்களில் ஒரு குறிப்பிட்ட சங்கத்தினரே தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக பணிபார்த்து வருகின்றனர். எனவே வருவாய் நிர்வாக ஆணையரின் அறிவுரைப்படி கூர்நோக்கு பணியிடங்களை பார்க்காதவர்களை பணியமர்த்திட வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டது.
The post உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார்; பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் appeared first on Dinakaran.