இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன் ஷிப் புள்ளி பட்டியலில் 74.24 சதவீத வெற்றியுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆட்டநாயகன்விருது பெற்ற அஸ்வின் போட்டி முடிந்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஜெயஸ்வால் சுதந்திரமாக விளையாடக்கூடிய ஸ்பெஷல் திறமையானவர் என்று நினைக்கிறேன். சுப்மன் கில் போலவே அவரும் தன்னுடைய சர்வதேச கேரியரை சமீபத்தில் துவங்கினார்.
இருவருமே தங்களுடைய ஆரம்பகட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அணியின் வருங்கால தூண்களாகவும், வெளிநாட்டில் அசத்தும் நட்சத்திரங்களாகவும் இருப்பதை நாம் விரைவில் பார்ப்போம். அவர்களின் அற்புதமான பயணத்தில் அனுபவத்தால் மேம்பட்டு விளையாடுவார்கள். அவர்கள் இருவரும் ஸ்பெஷலானவர்கள் என்பதை நாம் அறிவோம்.
அவர்கள் மேலும் மேலும் புதிய அனுபவத்தை சந்திக்கும் போது இன்னும் சிறப்பாக என்ன வேலை செய்ய என்பதைப் பற்றி அடையாளம் காண முடியும். இருவருமே உயர்தர வீரர்கள் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது, என்றார்.வங்கதேச அணியின் பயிற்சியாளர் ஹத்துருசிங்கா கூறுகையில், “இந்திய அணி பேட்டிங்கில் வெளிப்படுத்திய இந்த அணுகுமுறையை இதற்கு முன் பார்த்தது கிடையாது.
இப்படி ஒரு அணுகுமுறையை எடுத்து விளையாட்டை முடிவுக்கு கொண்டு சென்றதற்கு முழு பெருமையும் ரோகித் சர்மாவுக்கும் அவருடைய குழுவுக்கும் சென்று சேர வேண்டும். இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமான பணியாகும்.எனவே எவ்வளவு முன்னேற வேண்டி இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவார்”, என்றார்.
The post ஜெய்ஸ்வால்,சுப்மன்கில் எதிர்கால நட்சத்திரங்கள் : அஸ்வின் பேட்டி appeared first on Dinakaran.