யு19 உலகக் கோப்பை இளம் இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே கேப்டன்

மும்பை: வரும் 2026ம் ஆண்டு, ஜனவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான யு19 உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகள், ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்கும் இளம் இந்திய அணியின் கேப்டனாக, ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வரும் ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கு முன், தென் ஆப்ரிக்கா அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் இளம் இந்திய அணியில், ஆயுஷ் மாத்ரே ஆடாததால், அவருக்கு பதில் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக ஆரோன் ஜார்ஜ் செயல்படுவார்.

Related Stories: