* துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன்.
* ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்: தமிழ்த் திரைப்பட நடிகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். அண்ணன் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
* தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: ரஜினிகாந்தை பொறுத்தரை கடினமான உழைப்பு, எதிலும் உறுதியாக இருந்து துணிச்சலாக கருத்துகளையும் கூறுபவர். கோடான கோடி தமிழர்கள், ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் நிரந்தரமாக பெற்று வரும் அவர், உடல் நலம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
* தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.
* பாமக தலைவர் அன்புமணி: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் நடிகர் ரஜினிகாந்த் விரைவாக முழு நலமடைந்து இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர்: நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து பூரண உடல் நலத்துடன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். சூப்பர் ஸ்டாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களின் வேண்டுதல் அவர் விரைவில் குணமடைய நிச்சயம் கை கொடுக்கும்.
The post விரைவில் நலம் பெற நடிகர் ரஜினிகாந்துக்கு தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.