இதில், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எம்.குமார் தலைமை தாங்கி, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி ரவி, தலைமை மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் மகாவீர்சாந்த், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தமிழ்செல்வன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நவீன்,
மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தினேஷ் பாபு, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் எம்.சம்பத், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் ரவி, தாமோதரன், ஜானகிராமன், ரமேஷ் பாக்யராஜ், பார்த்தசாரதி, பாலசந்தர் கலந்துகொண்டனர். இதோபோல், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டதை கொண்டாடும் வகையில்,
காஞ்சிபுரம் சங்கரமடம், தந்தை பெரியாரின் சிலை அருகே தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யாசுகுமார் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், மாநகர 1வது பகுதி செயலாளர் கே.திலகர், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தாஸ், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய ஒன்றிய துணை செயலாளர் கிளார் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு காஞ்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.