காரைக்கால் சிறப்பு பள்ளியில் சர்வதேச சைகை மொழி தினம்

காரைக்கால்,செப்.26: காரைக்கால் பார்வையற்றோர் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் சர்வதேச சைகை மொழி தினம் காரைக்கால் மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் – விரிவாக்க சேவை மையம் காரைக்காலில் உள்ள பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இங்கு சர்வதேச சைகை மொழி தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறையின் நல அலுவலர் சுந்தரம், ஜிப்மரில் பணியாற்றும் பேச்சு மற்றும் ஒலியியல் மருத்துவ நிபுணர் கல்யாணி மகளிர்க்கான ஒருநிருத்த மையம் பணியாளர்கள், பிரதான் மந்திரி திவியஷா கேந்திரா ஊழியர்கள், சமூகப் பணியாளர்கள் அங்கன்வாடி மண்டலம் ஒன்று விரிவாக்க சேவைமைய ஊழியர்கள், சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி சமூக நலத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் நடைபெற்றது.ஜிப்மர் மருத்துவமனை பேச்சு மற்றும் ஒலியியல் மருத்துவ நிபுணர் கல்யாணி கலந்து கொண்டு, இந்திய சைகை மொழியின் முக்கியத்துவம் மற்றும் அதன் கட்டுக்கதைகளை டிகோடிங் செய்தல், ஒரு ஆடியோலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச்-லாங்குவேஜ் நோயியல் நிபுணரின் பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றினார். சிறப்புக்கல்வி ஆசிரியர் கார்த்திக் செயல்பாடுகள் விரிவாக்க சேவையின் செயல்பாடுகள் குறித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கான நோக்குநிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மேலும் முழக்கப் போட்டி அங்கன்வாடி சமுதாயப் பணியாளர்களுக்கு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post காரைக்கால் சிறப்பு பள்ளியில் சர்வதேச சைகை மொழி தினம் appeared first on Dinakaran.

Related Stories: