இரு அணிகளுமே பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரிக்க தொடர் வெற்றிகள் கட்டாயம் என்ற நிலையில் உள்ளன. ஆப்கான் அணியுடன் நடக்க இருந்த டெஸ்ட் மழை காரணமாக ரத்தானது, இலங்கையுடனான தோல்வி நியூசிலாந்துக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. எனவே, 2வது டெஸ்டில் பதிலடி கொடுக்க நியூசி. தரப்பு வரிந்துகட்டுகிறது. அதே சமயம், சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடுவது தனஞ்ஜெயா டி சில்வா தலைமையிலான இலங்கை அணிக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இரு அணிகளுமே வெற்றிக்கு குறி வைப்பதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.
The post இலங்கையுடன் 2வது டெஸ்ட்: பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து? appeared first on Dinakaran.