தென்தாமரைகுளம், செப்.25: அகஸ்தீஸ்வரம் அடுத்துள்ள சுக்குபாறைதேரி விளையில் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கோல்டு ஸ்டார் கிளப் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.இதில் மொத்தம் 30 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல் பரிசு பெற்ற சரவணன்தேரி அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையும்,இரண்டாம் பரிசு பெற்ற சுக்குபாறைதேரிவிளை ஏ அணியினருக்கு ரூ.8 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும், மூன்றாம் பரிசு பெற்ற பூஜைபுரைவிளை அணிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும், நான்காம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.4 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு, நியூ பாரத் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கினர். இதில்,கவுன்சிலர் சந்திரா, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேதுபதி, திமுக நிர்வாகிகள் பொன் ஜான்சன், தமிழ்மாறன்,காமராஜர் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உட்பட ஊர் மக்கள் பலர் பங்கேற்றனர்.
இன்றைய மின்தடை
குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருங்கல் துணை மின்நிலையத்தில் 25ம் தேதி (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிக்கடை, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம், முள்ளங்கினாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன் காலனி மற்றும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 8 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
The post சுக்குபாறைதேரிவிளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.