நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்; அதிபர் தேர்தலில் தோற்றால் மீண்டும் போட்டியிட மாட்டேன்: டிரம்ப் சூளுரை

வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணைஅதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கருத்து கணிப்புகள் கமலா ஹாரிசுக்கு ஆதரவாகவே வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது டிரம்ப்பிடம் 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் அதிபராக இருந்தபோது உருவாக்கப்பட்ட கொரோனா தொற்று தடுப்பூசிகளின் வளர்ச்சியை கண்டு நான் பெருமைப்படுகிறேன். ஆனால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு எனக்கு கடன் கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன். அதற்கான அனைத்து முயற்சிகளையும் சரியாக செய்கிறேன். ஆனால் ஒருவேளை நவம்பரில் நடக்கும் தேர்தலில் தோற்று விட்டால் 2028 அதிபர் தேர்தலில் நிச்சயம் போட்டியிட மாட்டேன்” என்று கூறினார்.

The post நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்; அதிபர் தேர்தலில் தோற்றால் மீண்டும் போட்டியிட மாட்டேன்: டிரம்ப் சூளுரை appeared first on Dinakaran.

Related Stories: