ஐநா பொது சபையில் வாக்கெடுப்பு நடத்தி சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பு நாடுகள் நியமிக்கப்படும். இதன்படி, கடந்த ஜூன் மாதம் நடந்த வாக்கெடுப்பில், ஐநாவின் 193 நாடுகளில் 182 நாடுகளின் ஆதரவை பெற்று பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் 2 ஆண்டு பதவிக்காலம் நேற்று தொடங்கியது. இதற்கு முன் இக்கவுன்சிலில் பாகிஸ்தான் 2012-13, 2003-04, 1993-94, 1983-84, 1976-77, 1968-69 மற்றும் 1952-53ம் ஆண்டுகளில் தற்காலிக உறுப்பினர் பதவியில் இருந்துள்ளது.
இது குறித்து ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் அக்ரம் கூறுகையில், ‘‘ஐநா சாசனத்தின்படி, போர்களை நிறுத்துவதற்கும், மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளை ஊக்குவிப்பதற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பை பாகிஸ்தான் வழங்கும். பாதுகாப்பு கவுன்சிலில் எங்களது இருப்பு உணரப்படும்’’ என்றார். தற்போது 5 நிரந்தர உறுப்பு நாடுகளுடன் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அல்ஜீரியா, கயானா, தென் கொரியா, சியரா லியோன் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய 5 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுடன் பாகிஸ்தான், டென்மார்க், கிரீஸ், பனாமா, சோமாலியா ஆகிய 5 தற்காலிக உறுப்பு நாடுகளும் இணைந்துள்ளன.
The post தற்காலிக உறுப்பினராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாக். பதவிக்காலம் துவக்கம் appeared first on Dinakaran.