கார் வெடித்து சிதறியதால் அதற்குள் இருந்த ஓட்டுநர் உயிரிழந்தார். அருகில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். சுக்கு நூறாக வெடித்த சைபர்டிராக் ரகமான பேட்டரி எலெக்ட்ரிக் கார், தொழில் அதிபரும் டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளருமான எலான் மஸ்க் நிறுவனமான டெஸ்லா நிறுவன தயாரிப்பு ஆகும். லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஹார்லியன்ஸ் நகரில் உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கூட்டத்திற்குள் காரை மோதவிட்டு 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு இந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எனவே இது தீவிரவாத தாக்குதலா அல்லது தொழில் நுட்ப கோளாறா என்ற கோணத்தில் அமெரிக்காவின் புலனாய்வு முகமையான எஃப்பிஐ தனது விசாரணையை தொடங்கி உள்ளது. வெடித்துச் சிதறிய காரை கொலராடாவில் மர்ம நபர் ஒருவர் வாடகைக்கு எடுத்தது உறுதியாகி உள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதிபராக பதவியேற்க உள்ள ட்ரம்பிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
The post டிரம்ப்பின் ஓட்டலுக்கு அருகில் டெஸ்லா கார் வெடித்துச் சிதறியது : 20-ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்புக்கு எச்சரிக்கையா? appeared first on Dinakaran.