காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமாகா சார்பில் புதிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் அறிமுக கூட்டம்: மாநில பொதுச்செயலாளர் பங்கேற்பு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமாகா சார்பில் நடந்த புதிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ராஜன் எம்பி நாதன் பங்கேற்றார். காஞ்சிபுரம் மாநகராட்சி காந்தி சாலையில் உள்ள தனியார் விடுதியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுசெயலாளர் ராஜம் எம்பி நாதன் கலந்துகொண்டு, புதிய உறுப்பினர்கள் மற்றும் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.  மேலும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பெருமளவில் உறுப்பினர்களை சேர்க்கவும், பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் பொதுமக்களை நாடி சென்று உறுப்பினர்களாக சேர்த்து, தமிழ் மாநில காங்கிரசுக்கு வலுசேர்க்க வேண்டும் எனவும் புதிய நிர்வாகிகளுடன் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநகர தலைவர் சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ், வட்டார தலைவர் கஜேந்திரன், விசார் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், மாவட்ட பொருளாளர் விசுவநாதன், மாவட்ட துணை தலைவர்கள் பி.கே.சுப்பிரமணியன், சுகுமார், மாவட்ட பொது செயலாளர் சிவமுதலியார், டெல்லிபாபு, மாவட்ட செயலாளர்கள் ரஜினி, முத்து, ராமகிருஷ்ணன், ராஜம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமாகா சார்பில் புதிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் அறிமுக கூட்டம்: மாநில பொதுச்செயலாளர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: