மனோஜ் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அவரது வீட்டிற்கு சிறுமியை அழைத்துச்சென்று பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இதனால் கடந்த 9ம் தேதி சிறுமிக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டபோது சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தகவலை சிறுமி தனது காதலன் மனோஜிடம் தெரிவித்தபோது அதனை அவர் ஏற்க மறுத்து அலட்சியப்படுத்தி சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.
காதலனின் தாயாரிடம் இதுகுறித்து கூறியபோது அவரும் சிறுமியை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி தனது தாயாரை அழைத்துக்கொண்டு அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமாரின் தனிப்படை போலீசார் நேற்று ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை நல்லையா நாயுடு தெரு பகுதியைச் சேர்ந்த மனோஜ் (23) என்ற வாலிபரை கைது செய்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
The post திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.