நாகலிங்கத்துக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த மீனவர்கள் அவசரமாக நேற்று காலை கரை திரும்பினர். இதுபற்றி மீனவ பஞ்சாயத்தார், கடலோர காவல் படையில் புகார் தெரிவித்தனர். காயமடைந்த 3 மீனவர்களையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கோடியக்கரையில் இருந்து நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்ற பெருமாள்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் குமார், லட்சுமணன், ஜெகன் ஆகியோர் கோடியக்கரை அருகே நடுக்கடலில் இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் தாக்கி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை உள்ளிட்ட உபகாரணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
The post கோடியக்கரையில் நடுக்கடலில் மீன்பிடித்த 6 மீனவர்களை அரிவாளால் வெட்டி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம் appeared first on Dinakaran.