பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மேற்கு மாவட்ட தலைவர் பகுஜன் எம்.பிரேம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் கடம்பத்தூர் ஹரி அனைவரையும் வரவேற்றார். தொகுதி தலைவர் சேலை சுரேஷ், ஈக்காடு வினோத், கடம்பத்தூர் காமராஜ், பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகி பி.டி.சேகர் கலந்துகொண்டு, தந்தை பெரியாரின் உருவ படத்திற்கும், கே.ஆம்ஸ்ட்ராங் உருவ படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் கிழக்கு மாவட்ட தலைவர் வெள்ளனூர் வெங்கட், மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ், ஒன்றிய நிர்வாகிகள் விக்னேஷ், கார்த்திக், பார்த்திபன், அன்பரசு, கோட்டி, நூர்முகமது, அகரம் பிரேம், விஜய், சாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: