சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் தெப்பக்குளத்தில் திரிசூலம் ஸ்தாபனத்துடன் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கடந்த 7ம் தேதி பிரமோற்சவம் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு வம்சத்தினரும் ஒவ்வொரு வாகனத்தை பூஜை செய்து தொடங்கி வைப்பது வழக்கம். அதேபோல் பிரமோற்சவத்தின் 9வது நாளான நேற்றுமுன்தினம் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து பலிஜ குல வம்சத்தினர் தொடங்கி வைத்தனர்.
சுவாமியின் வீதிஉலாவின்போது கோலாட்டங்கள், பரதநாட்டியங்கள் நடந்தது. பிரமோற்சவத்தையொட்டி கோயிலில் வில்லு பாட்டு, விநாயகரின் கீர்த்தனைகள் நடந்தது
பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து துவாஜா அவரோகணம் (கொடி இறக்கம்) நடைபெற்றது. பின்னர் கோயில் தெப்ப குளத்தில் திரிசூல ஸ்நாபத்துடன் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் கோயில் பிரதான அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் மற்றும் கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வண்ணப் பொடிகளை பூசிக்கொண்டு குளத்தில் நீராடி ஸ்ரீ வரசித்தி விநாயகரை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் குளிர்பான நீர், அன்னதானம், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. காவல்துறை சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரம் முழுவதும் ஆங்காங்கே சிசி கேமராக்கள் குறித்து 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரம்மோற்சவத்தின் பதினோராம் நாளான இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து பல்லவ வம்சத்தினர் அதிகார நந்தி வாகனத்திற்கு பூஜை செய்து வாகனத்தை தொடங்க வைக்க உள்ளனர்.
The post சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவம் தெப்பக்குளத்தில் திரிசூலம் ஸ்தாபனத்துடன் தீர்த்தவாரி appeared first on Dinakaran.