புதுடெல்லி: கடந்தத 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஒன்றிய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது குருப்-டி பதவிகளுக்கு பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில்,ரயில்வே குருப் டி பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களில் பலரின் நிலங்களை லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் பெயருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இதில் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை துணை குற்ற பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில், அடுத்த மாதம் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி லாலு பிரசாத்,தேஜஸ்வி ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.
The post லாலு, தேஜஸ்விக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் appeared first on Dinakaran.