புதுடெல்லி: மோடி தலைமையில் பாஜ கூட்டணி 3ம் முறையாக ஆட்சி அமைத்து கடந்த 16ம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைந்து விட்டன. மோடியின் 100 நாள் ஆட்சி பற்றி காங்கிரஸ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “ மோடி அரசின் 100 நாள்கள் நாட்டுக்கு மிகவும் கடினமானது. எந்த செயல்திட்டங்களும் காணப்படவில்லை. எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அதே வெற்று கோஷங்கள். பாஜவின் இந்த கூட்டணி மோசடி கூட்டணி. இந்த கூட்டணியால் நாடு சோர்வடைந்துள்ளது. மக்கள் சகிப்புத்தன்மையை இழந்து விட்டனர்” என்று கடுமையாக தாக்கி உள்ளார்.
The post மோடியின் 100 நாள் ஆட்சி நாட்டுக்கு கடினமானது: காங்கிரஸ் தாக்கு appeared first on Dinakaran.