நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் நிறுவன மேலாண்மை இயக்குநர் தேவநாதன், நிறுவனத்தின் இயக்குநர்களான குணசீலன், மகிமை நாதன் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று (செப்.13) மற்றொரு இயக்குநரான சுதீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவின் சார்பில் அறிவுறுத்தியுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவின் சார்பில் மனு மேளா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை மயிலாப்பூர் பைனான்ஸ் கிளப் என்ற இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மனு மேளா நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனைத்து ஆவணங்களையும் கொண்டு புகார் அளிக்கலாம்.
The post மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 3,814 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் appeared first on Dinakaran.