துவரங்குறிச்சி, செப்.18: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் கார்வாடி வடக்கி களத்தை சேர்ந்த செல்வம் (53). இவர் அரசு அனுமதியின்றி சட்டவிதமாக மது விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்பி தனிப்படை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, செல்வம் என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post புத்தாநத்தம் அருகே அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.