08 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய போதை வாலிபர் கைது

1மதுரை, செப். 18: மதுரையில் நேற்று அதிகாலையில் காயமடைந்தவரை சிகிச்சைக்கு கொண்டுவர அழைக்கச் சென்ற 108 ஆம்புலன்சின் கண்ணாடியை உடைத்ததுடன், மருத்துவ பெண் உதவியாளர், டிரைவர் இருவரும் போதை வாலிபரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோச்சடை நடராஜ் நகரை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவர் தனது தந்தை கணேசன் தவறி கீழே விழுந்து விட்டதாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும்படி 108 ஆம்புலன்சுக்கு நேற்று அதிகாலை ஒன்றரை மணியளவில் போன் செய்தார். மதுரை காளவாசல் பகுதி ஆம்புலன்ஸ் அங்கு விரைந்து சென்றது.

வீட்டு முன்பு ஆம்புலன்சை மது போதையில் மறைத்த கணேசனின் மகன் சரவணக்குமார், ‘என் அப்பாவை ஏற்றிச் செல்ல விடமாட்டேன் நான் அழைக்கவில்லை, ஏன் வந்தீர்கள்?’ எனக்கூறி திடீரென அங்கு கிடந்த கற்களை எடுத்து மருத்துவ பெண் உதவியாளர் தேவதா(36), டிரைவர் அருண்குமார்(38) ஆகியோர் மீது வீசி தாக்கினார். மேலும் ஆம்புலன்சின் முன் கண்ணாடியை கல் வீசி உடைத்தார். தேவதாவை கைகளால் தாக்கியதுடன், அருண்குமாரின் கையை கடித்து காயப்படுத்தினார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். காயமடைந்த தேவதா, அருண்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து எஸ்எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிந்து, சரவணக்குமாரை கைது செய்தனர்.

The post 08 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய போதை வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: