களக்காடு நகராட்சியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்

களக்காடு, செப். 14: மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட தலைவர் களக்காடு சித்திக் அஸிஸுர் ரஹ்மான், மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: களக்காடு நகராட்சி பகுதியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சுமார் 200 சதவிகிதம் வரை வரி உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். களக்காடு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள போதும் நகராட்சிக்குரிய கட்டமைப்போ, சூழலோ இல்லை. களக்காடு நகராட்சியில் 99 சதவீதம் பேர் விவசாயத்தையும், அதை சார்ந்த தொழில்களையும் நம்பியுள்ளனர். இந்நிலையில் வரி சுமை அதிகரிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் தவித்து வருகின்றனர். சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. எனவே களக்காடு நகராட்சியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post களக்காடு நகராட்சியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: