திருவாரூர்,: நாகை மாவட்டம் கரியாப்பட்டினத்தை சேர்ந்த விஜயக்குமார் மனைவி நீலாவதி(28). இவர் கணவரை விட்டு பிரிந்து புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜாதோப்பில் 2 ஆண்டுகளாக வாடகை வீட்டில் 7 வயது மகள் கனிசியுடன் வசித்து வந்தார். இவரது வீட்டுக்கு சந்திரசேகர், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அருண்பாண்டியன்(36) ஆகியோர் அடிக்கடி சென்று வந்தனர். கடந்த 10ம் தேதி காலை அருண் பாண்டியன், நீலாவதியின் மகள் கனிசியை, பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இறக்கி விட்டு சென்றார். அன்று மதியம் பள்ளிக்கு சென்ற சந்திரசேகர், கனிசியின் சித்தப்பா என்றும், நீலாவதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென கனிசியை அழைத்து சென்றார்.
அன்று நீலாவதியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது தலையில் ரத்த காயங்களுடன் சேலையால் கழுத்து இறுக்கப்பட்டு நீலாவதி இறந்து கிடந்தார். இதுகுறித்து விஏஓ அளித்த புகாரின்பேரில் மணமேல்குடி போலீசார், நீலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் புதுக்கோட்டை போஸ்நகர் மின் மயானத்தில் நீலாவதி உடலை அவரது தாய் புஷ்பவள்ளி தகனம் செய்தார். இதைதொடர்ந்து பள்ளி அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது கனிசியை சந்திரசேகர் அழைத்து சென்றதும், பனையடிகுத்தகையில் சிறுமியை இறக்கி விட்டு விட்டு செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டு சந்திரசேகரன் தலைமறைவானதும் தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று ஜாம்புவானோடையில் சந்திரசேகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீலாவதியின் கணவர் விஜயகுமார் வீட்டுக்கு உறவினரான சந்திரசேகர் அடிக்கடி சென்று வந்தார். அப்போது நீலாவதியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் 2021ம் ஆண்டு கணவனை பிரிந்து சந்திரசேகர் வீட்டுக்கு நீலாவதி சென்றார். கரியாபட்டினம் போலீசார் விசாரித்து சந்திரசேகரிடமிருந்து நீலாவதியை மீட்டு அவரது தாய் புஷ்பவள்ளியிடம் ஒப்படைத்தனர். இதைதொடர்ந்து மணமேல்குடி ராஜாதோப்பில் வசித்து வந்த நீலாவதி, சந்திரசேகருடன் தொடர்பில் இருந்து வந்தார். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டியனுடன் நீலாவதிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இது தொடர்பாக சந்திரசேகருக்கும் நீலாவதிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் நீலாவதியை சந்திரசேகர் கொலை செய்துள்ளார். நீலாவதியின் மகளை, பள்ளியில் இருந்து அழைத்து சென்று அவரது பாட்டி வீட்டில் விட்டுள்ளார். தற்போது தன்னை போலீசார் ேதடுவதை அறிந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக அருண்பாண்டியனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேறொருவருடன் பழகியதால் கழுத்தை நெரித்து கள்ளக்காதலி கொலை: போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.