ரூ.3 கோடியில் தோழர் ஜீவா, காந்தி சந்திப்பு நினைவு மண்டப பணிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

 

திருப்புத்தூர், செப். 11: திருப்புத்தூர் அருகே சிராவயலில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தோழர் ஜீவா, காந்தியடிகள் சந்திப்பு நினைவு மண்டப கட்டுமான பணிகளை நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்புத்தூர் அருகே சிராவயலில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை (நினைவங்கள்) துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தோழர் ஜீவா மற்றும் அண்ணல் காந்தியடிகள் சந்திப்பு நடந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் நினைவு மண்டபம் கட்டடப்பணிகளை நேற்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரரிடம் நினைவு மண்டப பணிகள், மண்டபத்துக்கு வரும் சாலை பாதைகள் குறித்து கேட்டறிந்தார் மேலும் பணிகளை விரைவில் முடிக்கவும் உத்தரவிட்டார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித், திமுக மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன், கல்லல் திமுக ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், சிறாவயல் ஊராட்சி தலைவர் சரோஜாதேவி குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post ரூ.3 கோடியில் தோழர் ஜீவா, காந்தி சந்திப்பு நினைவு மண்டப பணிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: