உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கு புதிய திட்டம்: ஒன்றிய அரசு முடிவு

புதுடெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியை அதிகரிக்க ஒருங்கிணைந்த கூட்டாண்மை திட்டத்தை தொடங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய கல்விக்கொள்ளை 2020ன்படி அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதலாவது நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நாட்டில் தற்போதுள்ள 40,000 உயர் கல்வி நிறுவனங்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி திறன்களை அதிகப்படுத்த கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கான கூட்டாண்மை திட்டத்தை அரசு தொடங்க உள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சி திறன் மிக்க கல்வி நிறுவனங்களுடன், ஆராய்ச்சி திறன் குறைவாக உள்ள கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டு கூட்டு வழிகாட்டல் முறை உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

The post உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கு புதிய திட்டம்: ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: