இந்நிலையில், அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொலைதூரக் கல்வி திட்டத்தில் போலியான ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்கலைக்கழகத்தின் பணியாற்றும் ஆசிரியர்களின் பெயர்களையும், தகுதியே இல்லாதவர்கள் பலரின் பெயரையும் தொலைதூரக் கல்விக்கான ஆசிரியர்களாக பட்டியலிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்றும், போலியான பட்டியலை காட்டி தொலைதூர கல்விக்கு அனுமதி பெறுவதற்காக மானியக் குழுவை ஏமாற்ற முயற்சி நடந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புதிய புகார்..!! appeared first on Dinakaran.