நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் முப்பெரும் விழா

நாகர்கோவில்,செப்.4: குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் கல்வித்துறையில் 70 ஆண்டுகள் சேவை, பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற 16வது ஆண்டு,2024-25ம் கல்வியாண்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா இன்று நடக்கிறது. நிகழ்ச்சியில் துணை வேந்தர் ஷாஜின் நற்குணம் வரவேற்கிறார்.வேந்தர் மஜீத்கான் குத்து விளக்கேற்றுகிறார்.இணை வேந்தர் பைசல்கான் தலைமை உரையாற்றுகிறார்.இணை வேந்தர் டாக்டர் பெருமாள்சாமி, துணை வேந்தர் டாக்டர் டெஸ்ஸி தோமஸ் ஆகியோர் அறிமுக உரையாற்றுகிறார்கள். 70 ஆண்டு கல்வி சேவை,பல்கலை கழக அஸ்தஸ்து பெற்ற 16ம் ஆண்டு குறித்து கேரள சபாநாயகர் ஷம்சீர் பேசுகிறார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், செயல் இயக்குனர் ஷப்னம் ஷபீக், எம்எல்ஏக்கள் எம்.ஆர்.காந்தி, சித்திக், கலெக்டர் அழகுமீனா, எஸ்பி சுந்தரவதனம், முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ், பிஷப் மார்ஜார்ஜ் ராஜேந்திரன், பதிவாளர் திருமால்வளவன்,அலையன்ஸ் பல்கலை கழக வேந்தர் டாக்டர். பி. பிரிஸ்லி ஷாம், பீமா ஜுவல்லர்ஸ் குழும தலைவர் கோவிந்தன், டாக்டர் நெல்லை சங்கர்,முன்னாள் பிரதமர் செயலாளர் கே. ஏ. நாயர், உலக மலையாளி கவுன்சிலின் உலகத் தலைவர் கோபாலபிள்ளை, பேராசிரியர் ஷ்யாம் மோகனன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

The post நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: