மேலும், பொது மருத்துவம், பெண்கள் நல மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவ சிகிச்சை, மனநல மருத்துவம், இதய சிகிச்சை, கல்லீரல் மருத்துவம், சிறுநீரக சிகிச்சை, போதை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை, எலும்பு மூட்டு சிகிச்சை, காது மூக்கு தொண்டை, கண் மருத்துவம், அறுவை சிகிச்சை, ஊட்டச்சத்து சிகிச்சை, காசநோய், தொழுநோய் கண்டறியும் சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை, சித்த மருத்துவம் ஆகிய 18 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. தூய்மை பணி மேற்கொள்ளும் 30 ஒப்பந்த பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகர்நல அலுவலர் அருள் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.