சங்கடம் எதுவும் சேராது காப்பாள் சேராத்தம்மன்

பல காலம் கேட்பாரற்று கிடந்த அம்மன் சிலை ஒருநாள் ஊர் மக்களின் கண்களுக்குத் தெரிந்தது. அது எப்படி? அக்காலத்தில் கொசஸ்தலை ஆற்றின் நீர் கூத்தாடிக் கூத்தாடி, கரை மீறி வழியுமாம். ஊரின் மகிழ்ச்சியும் கூடவே பொங் குமாம். கிராமத்தினர் கரை ஓரங்களில் தேங்கி நிற்கும் குட்டைகளில் மீன் பிடிக்கச் செல்வார்களாம். அப்போது தான் கிராமத்தினரின் கண்களுக்கு ஆற்றின் ஓரமாக இருந்த குட்டையில் இருந்தபடியே காட்சி தந்தாள் அம்மன். சேற்றில் மலர்ந்த தாமரையாய் அம்மனை கண்ட மக்களின் மனம் சிலிர்த்தது. நம்மைக் காக்க அம்மனே தேடி வந்து விட்டாள் என்று சந்தோஷப்பட்டார்கள். ஆற்றில் கிடைத்தவளை அள்ளி எடுத்து வந்தார்கள். வடக்கு நோக்கி அம்மனை அமர்த்தினர். சேறு நிறைந்த பட்டதால் சேராற்றம்மன் என்று அம்மனை அழைத்து, பிறகு சேராத்தம்மன் என்று சொல்லி நூற்றாண்டுகளாக வணங்கி வருகிறார்கள்.

அப்படி அம்மன் கண்டெடுக்கப்பட்ட அதே நேரத்தில் அங்கே வந்த சித்தர் ஒருவர் அம்மனை கண்டு, களிகொண்டு, அங்கேயே தங்கிவிட்டாராம்.பொதுவாக கோயிலைச் சுற்றி அழகிய மலர்கள் தரும் நந்தவனத்தை காணலாம். அப்பூக்களை பூஜைக்கும் உபயோகப்படுத்துவர். ஆனால், இந்த அம்மன் வித்தியாசமானவள். இவளைச் சுற்றி நந்த னத்துக்கு பதிலாக மூலிகை வனம் அமைந்திருக்கிறது. பேர் தெரிந்ததும், தெரியாததுமாகப் பல அரிய வகை மூலிகைகள் நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகை வனத்திற்கு மக்கள் செலுத்தும் மரியாதைக்கு அளவேயில்லை. கடந்த சித்திரை மாதம் மகா கும்பாபிஷேகம் கண்ட கோயில் இது.சேத்துப்பாக்கம் ஜமீன்கள் நிர்வாகத்தில் இருந்த போது, கருங்கல்லால், சிறிய அளவில் கோயிலைக் கட்டினார்கள். கிராமத்துப் பங்காக ஜமீன் வாரிசுகள் தலையில் குடம் சுமந்துகொண்டு வந்து அம்மனுக்கு விழாக்கள் கொண்டாடினார்கள். இதனாலேயே சிறியதாக உருவான கோயில், இப் போது பெரிய கோயிலாகப் பரிணமித்து, மூன்று ஊர் மக்களையும் அரவணைத்து அனைவருக்கும் அருள்பாலிக்கும் வண்ணம் கம்பீரமாகவும், அழகாகவும் காட்சி தருகிறாள், அம்மன்.

சித்தர்கள், மூலிகைத் தாவரங்களை மக்களின் உடலும், உள்ளமும் நலம் பெறவே பயன்படுத்துவார்கள். பல தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் ஒருவர் இதுபோன்ற மூலிகை வனத்தை அம்மனைச் சுற்றி அமைத்து தொண்டாற்றி யுள்ளார். சித்தர் ஒருவர் தாமே விரும்பி ஓரிடத்தில் வாழ்ந்தார் என்றால் அந்த இடம் மிகவும் புண்ணிய ஸ்தலமாக மாறும். நாம் மனச் சஞ்சலத்தோடு இருந்தாலோ அல்லது நம்மை /சங்கடங்களை எதிர்கொண்டிருந்தலோ இந்த மூலிகை வனத்திற்குள், அந்த நிழல்களுக்குள் நாயகியாக உள்ள சேராத்தம்மன் முன் நின்று தரிசித்தாலே அவையெல்லாம் எளிதில் கரைந்தோடு வதை பரிபூரணமாக உணர முடியும்.திருமணம் ஆகாதவர்கள் நீராடியபின் ஈரப் புடவையுடன் அம்மனை 11 முறை சுற்றி வந்தால் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 21 முறை சுற்றி வந்து அருகில் உள்ள மரத்தில் கயிறு கட்டினால் அவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். மூலிகை மருந்தால் நோயை விரட்டுவதுபோல் நம் பிரச்னைகளை சேராத் தம்மன் புன்னகைத்தபடி நீக்கிவிடுகிறாள்.திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் தாமரைப்பாக்கம், கூட்ரோடில் இருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள அகரத்தில் மூன்று ஊர்களுக்கும் நடுவே அழகாக அமர்ந்து சேராத்தம்மன் அருள்பாலிக்கிறாள்.

The post சங்கடம் எதுவும் சேராது காப்பாள் சேராத்தம்மன் appeared first on Dinakaran.

Related Stories: