ஜோதிடத்திற்குள் வள்ளிமலை முருகன் கோயில்

கிரகங்களே தெய்வங்களாக அருள்பாலிக்கின்றன அதுபோலவே, தெய்வங்களும் கிரகங்களுக்குள் சில தருணம் அடைபட்டுக் கொள்கிறது. அரசாண்ட மன்னர்கள் காலத்தில் பல கோயில்களும் கோட்டைகளும் மன்னர்களால் நிர்மானிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு மக்களும் அரசனும் பயன்படும் வகையில் இருந்தது. இதற்கு காரணம் அந்த குறிப்பிட்ட அரசனை காப்பது இந்த கோயில் தெய்வங்களாகவும் அந்த மக்களை தெய்வங்கள் காப்பது இந்த அரசர்கள் வழியிலும் தொன்றுதொட்டு தொடர்ந்து வந்துள்ளது என்பதனை வரலாறுகள் நமக்கு உணர்த்துகிறது. ஆகையால், கோயில்கள் என்பது பலரின் வாழ்வை மாற்றும் தன்மையுடையதாக உள்ளது. இதனை பலரும் ஆராய்ந்து கொண்டுதான் உள்ளனர்.

அவ்வாறு மேஷம் என்பது காலபுருஷத் தத்துவத்தின் தலைமையான வீடாக இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் வேலூர் என்பதே மேஷத்தை குறிக்கிறது அங்குள்ள கோயில்கள் மேஷத்தை லக்கினமாக கொண்டவர்களுக்கும் ராசியாக கொண்டவர்களுக்கும் ஒன்பதாம் பாவகம் என்ற பாக்கிய ஸ்தானமாக கொண்டவர்களுக்கும் ஐந்தாம் பாவகமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானமாக கொண்டவர்களுக்கும் வெகுமதியான நன்மைகளையும் நற்பலன்களையும் வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.

இந்த வாரம், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் உள்ள வள்ளிமலை முருகன் கோயில் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் உருவானதாகச் சொல்லப்படுகிறது. சமணர்களின் ஸ்தலமாக இருந்ததற்கான சான்றுகள் அதிகம் உள்ளது. வள்ளி முருகனை திருமணம் செய்ய விருப்பம் கொண்டு மஹா விஷ்ணுவின் பாதத்தை வைத்து வழிபட்டு பின்பு, அங்கு பிரசன்னம் செய்த முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்வதற்கு விரும்பினார். அதன்படியே, அவருக்கு திருத்தணியில் வள்ளியை முறைப்படி திருமணம் செய்து கொண்டார் என புராணங்களும் கல்வெட்டுகளும் சொல்கின்றன.

மேஷத்தில் செவ்வாய் வலிமை பெற்று துலாத்தில் சனி வலிமை பெற்றவர்களுக்கு திருமணத் தடை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற கிரக அமைப்புள்ளவர்கள் இக் கோயிலுக்கு வந்து தினை மாவும் தேனும் கலந்து அதனை விநாயகராக பிடித்து வைக்க வேண்டும். இந்த விநாயகரை முருகனுக்கு நெய்வேத்தியமாக வைத்து அர்ச்சனை செய்து. பின்பு, அடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளக்கரையில் உள்ள மீன்களுக்கு இந்த தேனும் தினை மாவையும் உணவாக இட வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்து தடைபட்ட திருமணம் நடந்தேறும் என்றும் திருமணத் தடங்கல் விலகும் என்பது நிதர்சனமான உண்மை.

அது போலவே, தொழில் மற்றும் உத்யோகத் தொடர்பான தடங்கல்கள் இருப்பவர்கள் இங்குள்ள முருகனுக்கு பாலும், பன்னீரும் அபிஷேகத்திற்கு கொடுத்து. பின்பு சரவணப் பொய்கையில் உள்ள மீன்களுக்கு உணவளித்தால் நல்ல தீர்வுகள் உண்டாகும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த வள்ளிமலை முருகன் கோயில் படியேறும் பொழுது யாசகம் பெற்று அந்த யாசகம் பெற்றதை முருகனுக்கு காணிக்கையாக செலுத்தி துலாபார வேண்டுதல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை வரம் உண்டாகின்றது என்பது சூட்சும ஜோதிட பரிகாரமாக உள்ளது.

The post ஜோதிடத்திற்குள் வள்ளிமலை முருகன் கோயில் appeared first on Dinakaran.

Related Stories: