இஸ்லாமிய விரோத நடவடிக்கையில் ஒன்றிய அரசு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

 

திருப்பூர், செப். 2: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் திருப்பூர் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நூர்தின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அசாம் மாநிலத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஹிந்து, முஸ்லிம்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் அம்மாநில முதல்வர் செயல்பட்டு வருவதை கண்டித்தும், மகாராஷ்டிராவில் மராட்டிய அரசர் சத்ரபதி சிவாஜியின் 40 அடி உயர சிலை உடைந்து விழுந்தது, பீகாரில் தொடர்ந்து விழுந்து நொறுங்கும் பாலங்கள் உள்ளிட்டவைகளில் ஊழல்வாதிகளை பாதுகாக்க மோடி அரசு செயல்படுவதாகவும், இதற்கு நீதிமன்ற விசாரணை அமைக்கப்பட வேண்டும்.

வக்பு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. மேலும், சுதந்திர தின உரையில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என பேசியது உள்ளிட்டவற்றை கண்டிக்கிறோம். போதைப்பொருள் புழக்கத்தை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் யாசர் அராபாத், மாவட்ட பொருளாளர் சிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post இஸ்லாமிய விரோத நடவடிக்கையில் ஒன்றிய அரசு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: