கரூர், செப். 2: கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 27ம்தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய எதிரிகள் சசிக்குமார்(24), மதன்(19) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், அந்த எதிரிகளை மாவட்ட எஸ்பி பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ‘குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ்’ மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த டிஎஸ்பி மற்றும் பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் ஆகியோர்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு தெரிவித்தார். மேலும், கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து பொது அமைதி சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
The post கரூரில் இருவருக்கு ‘குண்டாஸ்’ appeared first on Dinakaran.