வட நெம்மேலி முதலை பண்ணையில் நீர் உடும்புக்கு உடல் பரிசோதனை

மாமல்லபுரம், செப். 1: மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி இசிஆர் சாலையையொட்டி உள்ள முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக முதலைகள், நீர் உடும்புகள், அனகோண்டா பாம்பு, ஆமைகள் ஆகியவை வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கால்நடை மருத்துவ குழுக்கள் மூலம் வருடந்தோறும் முதலைகள், நீர் உடும்புகள் ஆகியவற்றின் உடல் நிலை சீராக உள்ளதா? என ஸ்கேன் செய்யும் நவீன கருவி மூலம் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கு ஏற்றார் போல் சிகிச்சை அளிப்பது வழக்கம். அதன்படி நேற்று முதலை பண்ணையில் உள்ள 2 நீர் உடும்புகளுக்கு கால்நடை மருத்துவக்குழு மூலம் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக, மருத்துவ குழுவை பார்த்ததும் உடும்புகள் தலைதெறிக்க அங்கும் இங்கும் ஓடியது. பின்னர், கோழி இறைச்சி போட்டு கம்பி வேலிக்கு அருகில் உடும்புகளை வரவழைத்து நவீன கருவி மூலம் ஸ்கேன் செய்து உடல் பரிசோதனை மேற்கொண்டது குறிப்பிடதக்கது.

The post வட நெம்மேலி முதலை பண்ணையில் நீர் உடும்புக்கு உடல் பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: