பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலப் பதக்கங்கள்


பிரான்ஸ்: பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் 2024 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டிகள் புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. பாரீஸ் பாராலிம்பிக்கில் போட்டியில் மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள், உடல் உறுப்பு குறைபாடுடைய 4,400 வீரர், வீராங்கனைகள் 22 விதமான போட்டிகளில் 549 பதக்கங்களுக்காக பங்குபெற்றுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறவுள்ளன. டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்ஸின் முந்தைய தொடரை ஒப்பிடும்போது, ​​பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு 10 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பாரா ஒலிம்பிக்கில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்றுள்ளார். 249.7 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றுள்ள அவனி லெகரா, பாரா ஒலிம்பிக்கில் அதிக புள்ளிகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

The post பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலப் பதக்கங்கள் appeared first on Dinakaran.

Related Stories: