உடைந்த சத்ரபதி சிவாஜி சிலை: பகிரங்க மன்னிப்பு கேட்டார் பிரதமர் நரேந்திர மோடி!!

குஜராத்: மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்பு கேட்டார். மராட்டியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கோட்டையில் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினத்தில் பிரதமர் மோடியால் இந்த சிலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இந்த 35 அடி உயர சிலை கடந்த 26ம் தேதி மதியம் 1 மணியளவில் திடீரென உடைந்து விழுந்தது.

பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களில் விழுந்து நொறுங்கியதால் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கனமழை பெய்ததாகவும், பலத்த காற்று வீசியதாகவும், சிலை உடைந்ததற்கான காரணம் குறித்து நிபுணர்கள் உறுதி செய்வார்கள் என்றும் கூறினார். இந்த நிலையில், சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும், இந்த சம்பவத்திற்காக சத்ரபதி சிவாஜியின் பாதம் பணிந்து 100 முறை மன்னிப்பு கேட்க தயார் எனவும் மராட்டிய மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, சிவாஜி சிலை உடைந்ததற்கு மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மராட்டியத்தில் காங்கிரசார் கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினர். மேலும், மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மும்பையில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், எதிர்ப்பு வலுத்த நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்பு கேட்டார். சிவாஜி சிலை உடைந்து நொறுங்கியதற்காக, சத்ரபதி சிவாஜியிடமே தான் மன்னிப்பு கோருகிறேன். சத்ரபதி சிவாஜியை கடவுளாக பார்ப்பதாகவும் அவரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

The post உடைந்த சத்ரபதி சிவாஜி சிலை: பகிரங்க மன்னிப்பு கேட்டார் பிரதமர் நரேந்திர மோடி!! appeared first on Dinakaran.

Related Stories: