தாராபுரத்தில் ஈரோடு எம்பி பிரகாஷ் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

தாராபுரம், ஆக. 29: தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு எம்பி பிரகாஷ் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நகர கழக செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், மற்றும் திமுக நகர கழக நிர்வாகிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நகரின் முக்கிய வார்டு பகுதிகளான காமராஜபுரத்தில் துவங்கி அரசமரம் 5 சாலை சந்திப்பு, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், 2வது வார்டு பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த போது அப்பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட எம்பி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தையல் இயந்திரங்கள் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுப்பேன் என உறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்பநாபன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகர கழக துணைச்செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் பிரபாவதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, நகர அவைத் தலைவர் கதிரவன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் ஆனந்தி, கவுன்சிலர்கள் அன்பழகன், ராஜேந்திரன், யூசுப், ஐயப்பன், ஆதி திராவிட நலக்குழு உறுப்பினர் சிவசங்கர், வார்டு நிர்வாகிகள் அப்பாஸ் அலி, அக்பர் பாஷா, ஷாஜகான், பைக் செந்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தென்னரசு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தாராபுரத்தில் ஈரோடு எம்பி பிரகாஷ் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: