பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது

 

கோவை, ஆக.24: கோவை மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்கள், 985 தனியார் பள்ளிகள், 1070 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 150 கல்லூரிகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்களின் மூலம் அல்பெண்டாசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டன.

விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 30-ம் தேதி வழங்கப்படும். இதன் மூலம் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட 9 லட்சத்து 56 ஆயிரத்து 71 பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் (கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் தவிர) 2 லட்சத்து 56 ஆயிரத்து 873 பேருக்கும் என மொத்தம் 12 லட்சத்து 12 ஆயிரத்து 944 பேர் பயனடையவுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: