வால்பாறை சாலையில் 40 கொண்டை ஊசி வளைவில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

 

வால்பாறை, ஆக. 22: வால்பாறை பகுதியில் நடைபெற்று வரும் சாலை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் அதிகாரிகள் குழுவினருடன் ஆய்வு செய்தார்.வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள 40-வது கொண்டை ஊசி வளைவில், சாலை சந்திப்பு மேம்பாடு பணிகள் துவங்கப்பட உள்ளது.சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது குறித்து நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகளை மேற்கொள்வதற்காக நெடுஞ்சாலைத்துறை,சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், கோட்டப்பொறியாளர் சரவண செல்வம், உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் ஆய்வு செய்தனர். மேலும் விரிவாக்கம் செய்யப்பட்ட மாதா கோவில் சந்திப்பு, பழைய வால்பாறை சந்திப்பு பகுதிகளை ஆய்வு செய்து, விரைவில் பணிகளை முடிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் வால்பாறை கவர்க்கல் கார்வர் மார்ஷ் சிலை பகுதியை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்து பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வால்பாறை சாலையில் 40 கொண்டை ஊசி வளைவில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: