உலக தற்கொலை தடுப்பு தினவிழா

 

ஈரோடு, செப்.11: ஈரோடு தந்தை பெரியார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தின விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மனநல மருத்துவர் ஆனந்த்குமார் வரவேற்புரையாற்றினார். மருத்துவ பணிகள் இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேசன், உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா, டாக்டர் முகமது அப்சர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனநல மருத்துவர் சரவணன் சிறப்புரையாற்றினார். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உளவியல் நிபுணர் ஜெயபிரகாஷ் தற்கொலை தடுப்பு உறுதிமொழியை வாசித்தார். இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள், பயிற்சி செவிலியர்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனர். முடிவில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

The post உலக தற்கொலை தடுப்பு தினவிழா appeared first on Dinakaran.

Related Stories: