பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, செப்.11: ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி ஈரோட்டில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் வளாகத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) அமைப்பினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முத்துராமசாமி பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில், ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.

The post பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: