லாட்ஜில் சிறுமிகளுடன் உல்லாசம் 17 வயது சிறுவன், வாலிபர் கைது: அறை ஒதுக்கிய மேலாளர் சிறையில் அடைப்பு


நாகர்கோவில்: கன்னியாகுமரி லாட்ஜில் சிறுமிகளுடன் உல்லாசமாக இருந்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். உடன் தங்கிய வாலிபர், அறை ஒதுக்கிய லாட்ஜ் மேலாளர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். கன்னியாகுமரி பஸ் நிலையம் அருகே ஒரு லாட்ஜில் சிறுவர், சிறுமிகள் சிலர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது 17 வயது சிறுமிகள் இருவரும், 17 வயது சிறுவன் மற்றும் 22 வயது வாலிபரும் ஒரே அறையில் தங்கி உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 22 வயதான வாலிபர் சட்டக்கல்லூரி மாணவரான குமார் என்று தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்ற போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் 17 வயது சிறுவன், குமார் மற்றும் அறை வழங்கிய தனியார் விடுதி மேலாளர் சிவன் (54), விடுதி உரிமையாளர் பால்ராஜ் (61) ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் குமார், மேலாளர் சிவன், உரிமையாளர் பால்ராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பால்ராஜ் உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்ற 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் 17 வயது சிறுவனையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் நாங்குநேரி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவார் என போலீசார் கூறினர். இரு சிறுமிகளையும் பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைக்க உள்ளதாக போலீசார் கூறினர்.

* உரிமம் ரத்து

முறையான முகவரி சான்று இல்லாமலும், சிறுவர், சிறுமிகளுக்கு அறைகள் ஒதுக்கும் லாட்ஜ் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றின் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

The post லாட்ஜில் சிறுமிகளுடன் உல்லாசம் 17 வயது சிறுவன், வாலிபர் கைது: அறை ஒதுக்கிய மேலாளர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: